கர்ணன்
மகாபாரதத்தில் குந்தி தேவி என்றழைக்கப்படும் பிரித்தா சூரசேனனினன் மகள் ஆவாள். வசு தேவனின் தங்கையும் ஆவாள்.திருமணத்திற்கு முன்னர் குந்தி தேவி துர்வாச முனிவரிடம் ஒரு வரம் கேட்டுப் பெறுகின்றாள். அதன் படி எந்த கடவுளை தான் நினைத்தாலும் அந்த கடவுள் குந்தி தேவிக்கு முன்னர் பிரசன்னமாவார்.
துர்வாச முனிவரிடமிருந்து குந்தி தேவி வரம் பெற்றவுடன் அதனை சோதித்துப் பார்க்கும் பொருட்டு சூரிய பகவானை நினைக்கின்றாள். உடனே சூரிய பகவான் குந்தி தேவியின் முன்னர் தோன்றியவுடன் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று வரம் கேட்கின்றாள். இதன் மூலம் கொடுக்கப்பட்ட வரம் பலிக்கின்றதா இல்லையா என்று சோதித்துப் பார்க்கும் முறை மகாபாரத காலத்திலேயே இருந்துள்ளது என்பது தெளிவாகின்றது.
திருமணத்திற்கு முன்னரே தாம் ஒரு குழந்தைக்குத் தாய் என்பதனை ஏற்க மாட்டார்கள் என்பதன் காரணமாக குந்தி தேவி அந்த குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றாள். அந்த குழந்தை அதிரதன் என்னும் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு வளர்ந்து வருகின்றது. அதிரதன் அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த திருதிராஷ்டிரன் என்னும் அரசனிடம் தேரோட்டியாக பணி செய்பவர்.
அந்த குழந்தைக்கு வளர்ப்பு தந்தையாக அதிரதனும் வளர்ப்புத் தாயாக வசுசேனாவும் இருக்கின்றார்கள். இதனால் குழந்தையில்லாத் தம்பதியர் தமக்கு பிறரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற குழந்தையை எடுத்து தமது பிள்ளை போல் வளர்க்கும் முறை அந்த காலத்திலேயே துவங்கியுள்ளது என்பது தெரிய வருகின்றது.
அதன் பின்னர் கர்ணன் துரோணாச்சாரியாரின் குருவான பரசுராமரிடம் சென்று குருகுலக் கல்வி பயில ஆசைப்பட்ட சமயம் பரசுராமர் பிராமணர்களுக்கு மட்டும் குருகுலக் கல்வி பயிற்றுவிப்பதாக அறிய வந்து தன்னை ஒரு பிராமணன் எனக்கூறி குருகுலக் கல்வி பெறுகின்றார். இதன் மூலம் மகாபாரத காலத்திலேயே தற்போது விடுதிகளில் தங்கிப் படிக்கும் முறை இருந்துள்ளது என்பது தெளிவாகின்றது.
அப்போது ஒரு நாள் பரசுராமருக்கு தூக்கம் வரவே கர்ணனின் மடியில் தலை வைத்து தூங்குகின்றார். நீண்ட நேரம் தூங்கிய சமயம் கர்ணனின் மடியில் ஒரு வண்டு கடித்த காரணத்தால் இரத்தம் வடிந்து கர்ணனுக்கு மடியில் வலி தாங்க முடியாமல் இருந்த போதும் பரசுராமரின் தூக்கத்தைக் கலைக்க விரும்பாமல் அப்படியே அமர்ந்து இருக்கின்றார். தூக்கத்திலிருந்து விழித்த பரசுராமர் இவ்வாறு வலியினையும் துன்பத்தினையும் ஒரு பிராமணனால் தாங்க முடியாது எனக் கூறி விட்டு தம்மிடமிருந்து பொய் சொல்லி கற்றுக் கொண்ட பிரம்மாஸ்திரம் என்னும் வில் வித்தை தேவையான நேரத்தில் பயன் படாது என்று சபித்து விடுகின்றார். கர்ணன் மன்னிப்பு கேட்ட காரணத்தால் தாம் கற்றுக் கொண்ட பிரம்மாஸ்திரத்தை வாழ்க்கையில ஒரு முறை மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்று சாபத்தை குறைக்கின்றார். எனவே அர்ஜூனனிடம் போர் புரியும் சமயம் அந்த பிரம்மாஸ்திரம் ஒரு முறைக்கு மேல் பயன் படுத்த முடியவில்லை. இதன் மூலம் மகாபாரத காலத்திலேயே ஜாதி இனம் என பாகுபாடு இருந்தது என்பதும் ஒரு தண்டனைக்கு மறு ஆய்வு செய்து தன்டனை குறைக்கப் பட்டுள்ளது என்பதும் தெளிவாகின்றது.
பஞ்ச பாண்டவர்களால் நடத்தப்பட்ட நேருக்கு நேர் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்ள கர்ணன் வரும் சமயம் கர்ணன் எந்த அரச குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொன்னால் தான் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று சொன்ன காரணத்தால் துரியோதனன் கர்ணனை தமது அரச குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று ஏற்றுக் கொண்டு அர்ச்சுனனிடம் சரி சமமாக போட்டியிட அனுமதிக்கின்றார். இதன் மூலம் ஒருவருடைய தனித் திறமையை வெளிக்கொண்டு வந்து உபயோகப்படுத்திக் கொள்ள மகாபாரத காலத்திலேயே வழி வகை செய்யப் பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.
கலிங்க நாட்டு இளவரசி பானுமதியை சுயம்வர முறைப்படி நடைபெற இருக்கும் திருமணத்திற்கு முன்னர் மணமகளை தேரில் துரியோதனன் கடத்திவர கர்ணன் உதவிய காரணத்தால் கர்ணனை தமது நண்பன் என ஏற்றுக் கொள்கின்றான்.
கர்ணன் தமது வளர்ப்புப் பெற்றோர் விருப்பப்படி அவர்கள் சொன்ன ஜாதிப் பெண்ணை முறைப்படி மணமுடிக்கின்றார்.
துரியோதனனும் அவனது சகோதரர்களும் பிற நாடுகளுடன் போரிட்டு வெற்றி வாகை சூட கர்ணன் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதால் திருதிராஷ்டிரன் கர்ணனை பீஷ்மர் எனவும் துரோணர் எனவும் புகழின் உச்சிக்கே கொண்டு செல்கின்றார்.
கர்ணன் யாரெல்லாம் தம்மை நாடி வருகின்றார்களோ அவர்களுக்கு எல்லாம் தமது பொருட்களை வாரி வழங்கி கொடை வள்ளல் என்னும் பெயர் பெருகின்றார்.