ஜெய் ஸ்ரீ ராம்
இராமாயணத்தில் இராமர் தன்னிடமிருந்து சீதையை அபகரித்துச் சென்ற இராவணனிடமிருந்து சீதையை மீட்க அனுமன் உதவினார்.
எந்த விதமான நவீன விஞ்ஞானத் தொழில் நுட்பமும் இல்லாத இராமாயண காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலில் அனுமன் பாலம் அமைத்துக் கொடுத்தார்.
இராமனுக்கு ஒரே ஆச்சர்யம். இவ்வளவு பெரிய பாராங்கற்களை அனாயாசமாக எப்படி அனுமன் சுமந்து வருகின்றான் என்று.
இராமன் அனுமனைப் பார்த்து எப்படி எவ்வளவு பாரமான ஆனால் கடலில் மிதக்கக் கூடிய கற்களை சுமந்து வர முடிகின்றது என்று கேட்டார். (அவ்வாறான கற்கள் இராமேஸ்வரத்திற்கு முன்னர் உள்ள அனுமார் கோவிலில் இப்போதும் வைக்கப் பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் அவற்றை தண்ணீரில் அமுக்கி பார்க்க முடியும்)
தண்ணீரில் மிதக்கும் பாராங்கற்கள்
அவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றி அனுமனிடமே இராமர் கேட்க அனுமன் மூர்த்தி என்பது ஸ்ரீ இராமச் சந்திர மூர்த்தியாகிய நீங்கள். கீர்த்தி என்பது உங்களுடைய புகழ். நாமம் என்பது நான் கற்களை சுமந்து கொண்டு வரும் சமயம் நான் சொல்லும் உங்களுடைய நாமம்.
இராமனுக்கு ஒரு சந்தேகம். என்னை விட என்னுடைய புகழை விட என்னுடைய நாமத்திற்கு அவ்வளவு சக்தியுடன் கூடிய மகிமையா என்று வினவுகின்றார்.
இராமன் மீண்டும் ஒரு முறை தமது நாமத்தை தாமே சொல்லி ஒரு சிறு கல்லினை கடலில் போடுகின்றார். அதுவும் உள்ளே சென்று விடுகின்றது.
அப்போது நாங்கள் அனைவரும் இராமனுடைய பாதங்களே சரணாகதி என்று உங்களது நாமத்தை ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் என்று உளமாற உச்சரிப்பதனால் தான் நாங்கள் கொண்டு வந்து கடலில் போடும் கற்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் கடலில் மிதக்கின்றன. ஆனால் நீங்களே கல்லினைக் கடலில் போட்டு கை விட்டால் எங்கள் கதி இவ்வாறாகத் தான் இருக்கும் என்று அனுமன் தெரிவிக்கின்றார்.
அனுமன் கற்களைச் சுமந்து வந்து போடும் அதே சமயம் ஒரு அணில் தம்மால் இயன்ற அளவிற்கு சிறிய கற்களைக் கடலில் போடுகின்றது. இராமனுக்கு உதவி செய்யும் அந்த அணிலின்' செயலைப் பார்த்த இராமர் அணிலின் முதுகில் தடவிக் கொடுக்கின்றார்.
இராமன் இலங்கை செல்வதற்கு மிதக்கும் கற்களைக் கொண்டு அனுமன் பாலம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் இராமாயண காலத்திலேயே தண்ணீரில் மிதக்கும் அபூர்வமான கற்களைக் கொண்டு பாலங்கள் கட்டுமான பணியில் இது வரை கண்டுடிக்கப் படாத ஒரு தொழில் நுட்பம் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்பது தெளிவாகின்றது.
அனுமன் ஜெய் ஸ்ரீ ராம் என்னும் நாமத்தை உச்சரித்து பாலம் கட்ட முடிந்தது.
அதே போல திரிலோக சஞ்சாரி என்றழைக்கப்படும் நாரதர் எப்போதும் நாராயண நாராயண என்று உச்சரித்து வந்தமையால் மூன்று லோகங்களுக்கும் சென்று வர முடிந்தது.
கடவுள்களின் பெயரினை பல முறை நாம் உட்சாடனம் செய்யும் முறை இராமாயண காலத்திலேயே இருந்துள்ளது என்தனை இதன் மூலம் அறிவோம்.