இராமவதாரம்
அயோத்தியை தசரதன் என்னும் அரசன் ஆண்டு வந்தார். தசரதனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்.
முதலாவது மனைவி : கௌசல்யா
இரண்டாவது மனைவி : கைகேயி
மூன்றாவது மனைவி: சுமத்திரை
தசரதனுக்கு மூன்று மனைவிகள் இருந்தும் குழந்தைப் பேறு இல்லாமல் தசரதன் வருத்தப்பட்டார்.
தமக்கு குழந்தைப் பாக்கியம் கிடைப்பதற்காக பல யாகங்கள் செய்து வந்தார். அப்போது தசரதன் குழந்தைப் பேறு அடைய வேண்டி புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தார்.
அப்போது கடவுள் நேரில் தோன்றி தசரதனிடம் தேன் கலந்த ஒரு பானத்தை தங்க குடத்தில் கொடுத்தார்.
தசரதன் அதனைப் பெற்றுக் கொண்டு தனது மூன்று மனைவிகளுக்கும் குழந்தை பெற வேண்டும் என்பதற்காக பங்கிட்டுக் கொடுத்தார். அவர் பங்கீடு செய்த முறை கீழ் வருமாறு.
முதல் மனைவி கௌசல்யாவுக்கு பாதியளவு அதாவது 12ல் 6 பாகம்
இரண்டாவது மனைவி கைகேயிக்கு 12ல் 1 பங்கு
மூன்றாவது மனைவி சுபத்திரைக்கு 12ல் 5 பங்கு
இவ்வாறு தசரதன் மூன்று மனைவிகளுக்கும் தங்கக் குடத்தில் கிடைக்கப் பெற்ற மருந்து கலந்த தேனை கொடுத்த காரணத்தால் தசரதனுடைய மூன்று மனைவிகளும் கர்ப்பமாகி குழந்தைகள் கிடைக்கப் பெற்று பெயரிடுகின்றார்கள.
முதல் மனைவி கௌசல்யாவுக்கு ஒரு குழந்தை பிறக்கின்றது. அந்த குழந்தைக்கு இராமன் என்று பெயரிடுகின்றார்கள்.
மூன்றாவது மனைவி சுபத்திராவுக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. அந்த குழந்தைகளுக்கு லெட்சுமணன் என்றும் சத்ருக்கணன் என்றும் பெயரிடுகின்றார்கள்.
பொதுவாக நாம் ராமன் லெட்சுமணன் இருவரும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இராமன் தசரதனுடைய முதல் மனைவி கௌசல்யாவுக்கும் லெட்சுமணன் மூன்றாவது மனைவி சுபத்திரைக்கும் பிறந்தவர்கள். வேறு வேறு தாய் வயிற்றில் பிறந்து இருந்தாலும் யாரும் யாரையும் பிரித்துப் பார்த்தது கிடையாது.
தசரதன் தனக்குப் பிறந்த குழந்தைகள் நால்வரையும் வசிஷ்டரிடம் கல்வி பயல அனுப்பி வைக்கின்றார். குழந்தைகள் நால்வரும் கல்வி முடித்து வரும் சமயம் விஸ்வாமித்திரர் வந்து தசரதனிடம் தாம் யாகங்கள் செய்வதற்கு அரக்கர்கள் இடையூறாக இருப்பதாகவும் தனது யாகத்தினை வெற்றி கரமாக முடிப்பதற்கு ராமரை தம்முடன் அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றார்.
தசரதன் விஸ்வாமித்திரனின் கோரிக்கையை ஏற்று ராமரை அனுப்பி வைக்க சம்மதம் தெரிவிக்கின்றார். அந்த நேரம் லெட்சுமணன் தாமும் இராமருக்குத் துணையாக விஸ்வாமித்திரருடன் செல்ல வேண்டும் என் கேட்டுக் கொள்ள தசரதனும் விஸ்வாமித்திரரும் சரியென ஒப்புக் கொள்கின்றனர்.
அதன்படி விஸ்வாமித்திரர் இராமன் லெட்சுமணன் இருவரையும் தம்முடன் அழைத்துச் சென்று தமது யாகத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு அனைத்து வித பயிற்சிகளையும் இராமன் லெட்சுமணன் இருவருக்கும் கற்றுக் கொடுக்கின்றார்.
அப்போது விஸ்வாமித்திரர் மிதிலை நகருக்கு இராமர் லெட்சுமணன் ஆகிய இருவருடன் செல்கின்றார்.
மிதிலைக்கு இராமர் சென்ற சமயம் சீதைக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ஒரு நிபந்தனையுடன். நிபந்தனை என்னவெனில் மிதிலையில் உள்ள அரண்மனையில் உள்ள வில்லினை இரண்டாக உடைக்க வேண்டும் என்பது. பல மன்னர்கள் அந்த வில்லை எடுத்து உடைத்துப் பார்த்து தோல்வியடைகின்றார்கள்.
இராமர் அந்த வில்லினை எடுத்து தமது கரங்களால் இரண்டாக உடைத்து சீதையை மணந்து கொள்கின்றார். இராமரும் சீதையும் மணந்து கொண்ட பின்னர் விஸ்வாமித்திரர் திரும்ப அயோத்திக்கு வந்து இராமர் லெட்சுமணர் இரண்டு மைந்தர்களையும் இராமனுடைய மனைவியான சீதையை தசரதனுக்கு மருமகளாகவும் ஒப்படைக்கின்றார்.
நாம் அனைவருச்கும் பொதுவாக இராமர் மனைவி சீதை என்பது தான் தெரியும்.
ஆனால் தசதரனின் மைந்தர்களான நால்வருக்கும் திருமணமாகி மனைவிகள் உண்டு என்பதனையும் தெரிந்து கொள்வோம்.
இராமரின் மனைவி பெயர் - சீதை
லெட்சுமணனின் மனைவி பெயர் - ஊர்மிளா
பரதனின் மனைவி பெயர் - மாண்டவி
சத்ருக்னனின் மனைவி பெயர் - ஷ்ருதாகீர்த்தி
தசரதன் தனது மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முயற்சிக்கின்றார்.
அப்போது கைகேயியின் குடும்பத்தில் வேலை பார்த்து வந்த மந்தரை, தன்னுடைய எஜமானருடைய இல்லத்தில் கைகேயி பிற்பபதற்கு முன்னாலிருந்து பணியாற்றி வந்த காரணத்தாலும் கைகேயி மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்ததாலும் கைகேயிக்கு திருமணம் முடிந்தவுடன் தசரதனின் அயோத்தி அரண்மனைக்கு கைகேயியுடன் வந்து கைகேயிக்கு துணையாக எப்போதும் இருந்து வருகின்றாள். மந்தரையின் மூப்பு காரணமாக முதுகில் கூன் விழுந்து விடுகின்றது. எனவே பிற்காலத்தில் கூனி என்று சொல்லப் பட்டாள்
அதன்படி தசரதனை ஒரு சமயம் ஒரு ஆபத்திலிருந்து கைகேயி காப்பாற்றிய படியால் தசரதன் கைகேயிக்கு இரண்டு வரங்கள் அளிக்க ஒப்புக் கொண்டது ஞாபகத்திற்கு வருகின்றது.
தசரதன் கைகேயிக்கு கொடுத்த வரங்களை முடிசூட்டு விழாவிற்கு முன்னரே நிறைவேற்ற வேண்டுமென தசரதனிடம் கேட்க தசரதன் சரியென ஒப்புக் கொள்கின்றார்.
அதன் பின்னர் இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று முதல் வரமாகவும் பரதனுக்கு முடிசூட்டு விழா நடத்த வேண்டும் என்று இரண்டாவது வரத்தையும் கேட்கின்றாள்.
கொடுத்த வரத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் எவ்வளவோ அறிவுறைகள் கூறியும் ஏற்க மறுத்த காரணத்தால் இராமன் 14 ஆண்டு கால வன வாசம் செல்ல நேரிடுகின்றது. அச்சமயம் சீதையும் கூட வருவேன் என்று இராமனுடன் வன வாசம் மேற்கொள்கின்றாள்.
இராமர் தசரதனுடைய முதல் மனைவியின் மகன். லெட்சுமணன் தசரதனுடைய மூன்றாவது மனைவியின் மகன். இருந்தாலும் விஸ்வாமித்திரர் இராமரை தம்முடன் அழைத்துச் செல்லும் போது லெட்சுமணனும் கூட சென்றதால் இராமர் மீது அதிக அளவிலான அன்பு இருந்த காரணத்தால் தாமும் கானகம் செல்வேன் என தீர்மானித்து இராமருடன் கானகம் செல்கின்றார். அதே சமயம் லெட்சுமணனுக்கு திருமணம் ஆகியிருந்த போதிலும் ஊர்மிளா லெட்சுமணனுடன் செல்லாமல் அயோத்தியிலேயே இருந்து விடுகின்றாள்.
கைகேயியின் மகன் பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்து கொள்வதில் விருப்பமில்லை. தன்னுடைய தாயிடம் எவ்வளவு மன்றாடியும் செவி மடுக்காத காரணத்தால் முடிசூடிக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விடுகின்றான்.
இராமன் கைகேயியின் தூண்டுதலின் பேரில் கானகம் செல்லும் சமயம் முடிசூடிக் கொள்ள மறுத்த பரதன் இராமரிடமிருந்து அவரது பாதுகைகைப் பெற்று வந்து அந்த பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்துப் பூஜித்து வருகின்றார். இராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பி வரும் வரையில் பரதன் முடிசூடிக் கொள்ளாமல் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து இடைக்கால அரசின் பொறுப்பு மட்டும் வகித்தான்.
இதனிடையே சத்ருக்னன் கைகேயியின் செயலைக் கண்டு ஆத்திரமடைந்து கைகேயியைக் கொல்ல முற்படுகின்றார். அதற்கு பரதன் ஒரு பெண்ணை கொல்வது பாவம் என உபதேசம் செய்து விட்டு அயோத்தியில் இருக்கப் பிடிக்காமல் அடிக்கடி வெளியே சென்று விடுகின்றனர்.
இராமரை வனவாசம் அனுப்பிய துயரம் தாங்காத தசரதன் புத்திர சோகத்தால் வாடி உயிரிழக்க நேரிடுகின்றது.
தசரதன் உயிர் பிரிந்த சமயம் இராமர் மற்றும் லெட்சுமணன் ஆகிய இருவரும் வனவாசத்தில் இருக்கின்றனர். பரதன் மற்றும் சத்ருக்னன் ஆகிய இருவரும் அயோத்தியில் இல்லை. அயோத்தி என்னும் சாம்ராஜ்யத்திற்கு சக்ரவர்த்தியாக இருந்தும் நான்கு புதல்வர்கள் இருந்தும் யாரும் தசரதனுக்கு இறுதிச் சடங்குகள் செய்து கொள்ளி போட முடியவில்லை.
காரணம்.
தசரதச் சக்ரவர்த்தி தாம் சிறு பிள்ளையாக இருக்கும் சமயம் வேட்டையாடச் சென்ற போது தண்ணீர் குடிப்பது போல ஓசை கேட்ட படியால் யானை தான் தண்ணீர் குடிக்கின்றது என்று நினைத்து தன்னுடைய அம்பினைச் செலுத்துகிறார். ஆனால் சிரவணன் என்னும் சிறுவன் குவளையில் தனது கண்கள் தெரியாத வயது முதிர்ந்த பெற்றோருக்காக சரயு நதிக் கரையில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தான். குவளையில் தண்ணீர் நிரப்பும் ஒலியினை யானை தண்ணீர் அருந்துவதாக எண்ணி அம்பு எய்திய காரணத்தினால் சிரவணன் உடலில் அம்பு பாய்ந்து இறக்கும் தருவாயில் என்னுடைய கண் தெரியாத வயது முதிர்ந்த பெற்றோர் தண்ணீருக்காக தாகத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நடந்ததை எடுத்துச் சொல்லி தண்ணீர் கொடுத்து தாகம் தீர்க்குமாறு கேட்டு உயிர் விடுகின்றான். சிரவணன் கேட்டுக் கொண்டபடி தசரதன் அவனது பெற்றோருக்கு குவளையில் நீர் கொண்டு சென்ற சமயம் கண் தெரியாத வயது முதிர்ந்தவர்கள் “நாங்கள் இருவரும் எங்கள் ஒரே மகனை இழந்து எப்படி என்ன செய்வதென்று அறியாமல் எங்கள் கடைசிக் காலத்தில் தவிக்கின்றோமோ அதே போல நீ ஒரு அரசனாக இருந்தாலும் உனது உயிர் பிரியும் சமயம் உன்னுடைய புத்திரர்கள் உன்னை விட்டுப் பிரிந்து புத்திர சோகத்தில் இருப்பாய்” என்று சபித்து விடுவதோடு மட்டுமல்லாமல் தங்களது மகன் சிரவணனை எரிக்கும் அந்த சிதையிலேயே விழுந்து உயிர் விடுகின்றனர்.
தசரதன் சிறு பிள்ளையாக இருக்கும் போது சிரவணனின் கண் தெரியாத வயது முதிர்ந்த பெற்றோர் கொடுத்த சாபத்தால் ஒரு சாம்ராஜ்யத்திற்கு சக்ரவர்த்தியாக இருந்தும் நான்கு புதல்வர்கள் இருந்தும் சாகும் தருவாயில் இராமன் பிரிந்த புத்திர சோகத்தால் கஷ்டப்பட வேண்டியதாயிற்று.
வனவாசம் சென்ற இராமர் மீது மோகம் கொண்டு சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகின்றாள். இராமர் ஏக பத்தினி விரதனாக இருப்பதால் மறுத்து விடுகின்றார். ஆனால் லெட்சுமணன் சூர்ப்பநகையின் மூக்கை அறுத்து விடுகின்றார்.
சூர்ப்பநகை இராவணனிடம் சென்று தமக்கு நேர்ந்த இந்த கதிக்கு இராமர் தான் காரணம் என்றும் அவரைப் பழி வாங்க வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றாள்.
எனவே ராவணன் இராமனைத் தேடி வனத்திற்குச் சென்ற சமயம் இராமன் சீதை கேட்ட பொய் மானைப் பிடிக்கச் சென்று விட்டதாலும் அப்போது அலரல் சத்தம் கேட்ட லெட்சுமணன் ஒரு கோடு போட்டு சீதையை அந்த கோட்டிற்குள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி இராமனைத் தேடிச் செல்கின்றார்.
அந்த சமயம் அந்த இடத்திற்கு வந்த இராவணன் அந்தக் கோட்டினைத் தாண்ட முடியாத காரணத்தால் சீதையை கோட்டைச் சுற்றியிருந்த பூமியோடு பெயர்த்தெடுத்துச் செல்கின்றார்.
அதன் பின்னர் இராவணன் இருக்கும் இடமான இலங்கைக்கு அனுமன் உதவி கொண்டு போர்தொடுத்து சீதையை மீட்டு வருகின்றார்.
அனுமன் வாயு புத்திரன் ஆகையால் வானத்தில் பறந்து சென்று சீதையை சந்தித்து சீதையிடம் இராமரது கணையாழியைக் கொடுத்து சீதையின் கணையாளியுடன் இராமனிடம் திரும்பி கண்டேன் சீதையை எனக் கூறி அதன் பின்னர் கடலில் பாலம் அமைத்து போர் தொடுக்கின்றார்.
போர் நடந்து கொண்டிருக்கும் சமயம் இராவணன் மகன் இந்திரஜித் ஒரு கொடிய ஆயுதம் உபயோகப்படுத்த லெட்சுமணன் மயங்கி விழுந்து உயிர் பிரியும் நிலைக்கே போய் விட்ட சமயம் அனுமன் சஞ்சீவி மூலிகையினால் லெட்சுமணனை மீட்க முடியும் என்றறிந்து சஞ்சீவி மூலிகை எது என்று தெரியாத காரணத்தால் சஞ்சீவி மூலிகை வளர்ந்துள்ள சஞ்சீவி மலையையே கொண்டு வந்து அனைவரையும் மயக்கத்திலிருந்து தெளியச் செய்கின்றார்.
இராமன் இராவணனிடம் போர் புரியும் சமயம் அனுமன், சுக்ரீவன், அங்கதன் மற்றும் ராஜரிஷி ஜாம்பவான் மற்றும் ஜடாயு ஆகியோரும் துணை புரிகின்றனர்.
இராமன் பக்கம் நியாயம் இருப்பதால் இராவணனுக்கு அறிவுறை கூறியதை ஏற்க மறுத்த காரணத்தால் இராவணனின் சகோதரன் விபீஷனன் இராவணனிடமிருந்து பிரிந்து வந்து இராமருக்குத் துணை புரிகின்றார்.
இராமர் இராவணனுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடி சீதையை இராவணனிடமிருந்து மீட்டு வருகின்றார்.
14 ஆண்டு கால வனவாசம் முடிந்தவுடன் அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் செய்து கொள்கின்றார். இராமர் பட்டாபிஷேகத்தின் போது அயோத்தியே விழாக் கோலம் பூண்டிருந்தது. இராமர் பட்டாபிஷேகம் வரையில் இருந்த அயோத்தி இராமர் பட்டாபிஷேகம் முடிந்தவுடன் ராம ராஜ்யம் என்றழைக்கப்பட்டது.