லவ குசா
அயோத்தியின் அரசனான தசரதனின் மகன் இராமர் மிதிலை நாட்டு அரண்மனையில் உள்ள வில்லினை உடைத்து ஜனகன் மகள் ஜானகி என்னும் சீதையை சுயம்வர முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்.
இராம அவதாரத்தில் இராமர் ஏக பத்தினி விரதம் கடைப் பிடித்தார். எனவே தாமாக வலிய வந்து திருமணம் செய்து கொள்ளும் படி வேண்டிய சூர்ப்பநகையை தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது எனக் கூறி வேண்டாம் என்று மறுத்து உதறித் தள்ளினார். தற்போது நவீன காலத்தில் சின்னத்திரையில் பல நாடகங்கள் இந்த கருவினை மையப்படுத்தியே உள்ளன.
இதனைக் கண்ட லெட்சுமணன் சூர்ப்பநகையின் மூக்கினை அறுத்து அனுப்பி விடவே சூர்ப்பநகை தனது அண்ணனான இராவணனிடம் சென்று தமது அறுபட்ட மூக்கினைக் காட்டி தனது இந்த நிலைமைக்குக் காரணம் இராமன் தான் என்று சொல்லிய காரணத்தால் இராவணன் சீதையை அபகரித்துச் சென்று இலங்கையில் சிறை வைக்கின்றான்.
சூர்ப்பநகை மீது இருந்த அண்ணன் தங்கை பாசத்தினால் சீதையை கடத்தி வந்து விட்டால் இராமன் தமது மனைவியான சீதையை மீட்க வரும் சமயம் கொன்று விடலாம் என்னும் முன் ஏற்பாட்டுடன் தான் சீதையை புஷ்பக விமானத்தில் இராவணன் கடத்தி வருகின்றானே தவிர சீதையை அடைய வேண்டும் என்னும் எண்ணத்தில் கடத்தி வரவில்லை. அசோக வனத்தில் தனியாக இருக்கும் சீதையை இராவணன் ஒரு முறை கூட தொட்டதில்லை.
இராவணன் என்ன நினைத்தானோ அதே போல சீதை இருக்கும் இடத்தினை இராமன் கண்டு பிடித்து போர் தொடுக்கும் சமயம் இராமன் வெற்றி வாகை சூடிய காரணத்தால் இராவணன் பேரில் இறக்க நேரிடுகின்றது. இதன் மூலம் ஒருவரை ஒரு இடத்திற்கு தமது எல்லைக்கு வரவழைக்க வேறு வகையான உத்திகள் இராமாயண காலத்திலேயே கடைப் பிடிக்கப் பட்டன என்பது தெளிவாகின்றது.
இராமன் தன் மனைவி சீதையை மீட்க இலங்கை அரசன் இராவணன் மீது போர் தொடுத்து சீதையை மீட்டு வருகின்றான். இருந்த போதிலும் சீதை புனிதமானவள் மற்றும் பரிசுத்தமானவள் என நிரூபிக்க வேண்டும் என்றும் அனைவருடைய சந்தேகங்களையும் போக்க வேண்டும் என்றும் கேடடுக் கொண்ட படியால் சீதை அக்னியில் இறங்கி மீண்டும் வெளி வருகின்றாள்.
அதன் பின்னர் இராமர் பட்டாபிஷேகம் செய்து கொள்கின்றார். இராமனுக்கு பட்டாபிஷேகம் நடந்த பின்னர் கூட சீதை இராவணனால் சிறைபிடிக்கப் பட்டு இலங்கையில் இருந்த சமயம் கற்பு நெறியுடன் வாழ்ந்து இருப்பாளா என்ற சந்தேகம் மக்களிடையே இருந்து வந்தது. அது தற்போது கூறப்படும் கிசு கிசு எனப் பரவி வதந்தியாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் சீதை 5 மாத கர்ப்பிணியாக இருந்த சமயம் மீண்டும் எழுந்த வதந்திகளைக் கேட்டு மனமுடைந்த இராமன் சீதையை அரண்மனையை விட்டு வெளியேறுமாறு சொல்லி விரட்டுகின்றான்.
இராமனால் விரட்டப்பட்ட சீதை நேரடியாக தம்ச நதிக் கரையில் ஆசிரமம் வைத்து இருக்கும் வால்மீகி முனிவரிடம் தஞ்சமடைந்து வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வருகின்றாள். வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதை வாழந்து வரும் சமயம் லவன் என்று ஒரு மகனும் குசன் என்று ஒரு மகனும் சீதைக்கு இரட்டைக் குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்கின்றன.
வால்மீகியிடம் கல்வி மற்றும் இராணுவ வித்தைகள் அனைத்தும் பயின்று பெரியவர்கள் ஆகி லவன் மற்றும் குசன் ஆகிய இருவரும் லாவாபுரி என்னும் கானகம் சூழந்த பகுதியினை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றார்கள்.
மகாவிஷ்ணு அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க கீழ்க் கண்டவாறு பத்து அவராரங்கள் எடுக்கின்;றார்.
மச்ச அவதாரம் - 1
கூர்ம அவதாரம் - 2
வராக அவதாரம் - 3
நரசிம்ம அவதாரம் - 4
வாமன அவதாரம் - 5
பரசுராம அவதாரம் -6
இராம அவதாரம் - 7
கிருஷ்ண அவதாரம் - 8
பலராம அவதாரம் என்பது புத்த அவதாரத்தையும் குறிக்கும் - 9
கல்கி அவதாரம் இன்னும் பாக்கியுள்ளது - 10
இராமவதாரம் என்பது மகா விஷ்ணுவால் எடுக்கப்பட்ட ஏழாவது அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் பூவலகில் மனிதனாகப் பிறந்து ஏகபத்தினி விரதத்துடன் வாழ்ந்து அதர்மத்தை அழித்து தர்மத்தைக் நிலை நாட்டுவது இராமனனின் கடமை ஆகும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மூன்று விதமான ஆசைகள் இருக்கும் அவற்றுள் ஒன்று மண்ணாசை இன்னொன்று பெண்ணாசை மற்றொன்று பொன்னாசை.
இராம அவதாரத்தில் இராமன் ஏக பத்தினி விரதத்தைக் கடைப் பிடித்ததனால் இராமனுக்கு பெண்ணாசை கிடையாது. எனவே தான் சூர்ப்பநகை வலிய வந்து மணமுடிக்கக் கேட்டும் மறுக்க முடிந்தது.
ஆனால் மற்ற இரண்டு விதமான ஆசைகள் இராமனுக்கு நிறையவே இருந்தது. அவைகள் மண்ணாசை மற்றும் பொன்னாசை. அது 14 ஆண்டு கால வன வாசம் சென்று வந்த பின்னர் இராமர் பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் அயோத்தியை இராம இராஜ்யமாக மாற்ற வேண்டும் என்னும் பேராசையாக அதிகரிக்கின்றது.
எனவே இராமர் தமது அரண்மனையில் அசுவ மேத யாகம் செய்து அந்த யாகத்தின் பயனாக ஒரு வெள்ளைக் குதிரையின் செவிகளில் மந்திரங்கள் ஓதி அந்த குதிரையை ஒரு போர் படைத் தளபதியாக உருவாக்குகின்றார்.
அந்த மந்திர உபதேசம் பெற்ற குதிரை தனது முதுகில் இராம ராஜ்ய கொடியுடன் செல்லும் சமயம் சத்ருக்கணன் கூட செல்வார்.
அந்த மந்திர உபதேசம் பெற்ற குதிரை எந்தெந்த பகுதிகளுக்கு எல்லாம் செல்கின்றதோ அந்தந்த பகுதிகள் அனைத்தும் இராமராஜ்யம் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.
அரற்கு உடன் படாதவர்கள் மீது படையெடுத்து அந்தப் பகுதிகள் அல்லது அந்த நாடுகள் அனைத்தும் சத்ருக்கனன் செல்லும் தலைமையில் படைகள் போரிட்டு வெற்றி வாகை சூடிய பின்னர் இராம இராஜ்யத்தின் கட்டுப் பாட்டில் வந்து விடும். இதன் மூலம் தற்காலத்தில் உலகம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்று வல்லரசு நாடுகள் நினைக்கும் எண்ணம் அந்தக் காலத்திலே இருந்துள்ளது என்பது தெளிவாகின்றது.
இராம இராஜ்ய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர மறுக்கும் அரசர்கள் மீது போர் தொடுத்து இராமனுடைய போர்ப்படைகள் அந்த அரசர்களை சிறைப் பிடித்து அந்த நாடுகளை பேராசையுடன் கைப்பற்றி இராம ராஜ்யத்தை விரிவு படுத்தினான் இராமன். ஒரு நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றால் அந்த இராஜ்யம் தம்முடைய கைக்கு வருவதோடு அங்கிருக்கும் பொன் பொருள் எல்லாம் தமது கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். எனவே தான் அயோத்தி என்றழைக்கப்பட்ட ராஜ்யம் பட்டாபிஷேகத்திற்குப் பின்னர் இராமனின் பேராசையினால் விரிவு படுத்தப்பட்டதால் இராம ராஜ்யமாக (சாம் ராஜ்யம்) மாற்றி அழைக்கப் பட்டது.
இந்த நிலையில் இராமரது அஸ்வமேத யாக குதிரை லவன் மற்றும் குசன் ஆகிய இருவரும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் லாவாபுரி என்னும் இடத்திற்கு சென்ற சமயம் அந்த குதிரையை லவன் குசன் ஆகிய இருவரும் கட்டிப் போட்டு விடுகின்றார்கள்.
சென்ற குதிரையினைத் தேடிச் சென்று போர் தொடுக்க முயற்சிக்கும் சமயம் லவன் மற்றும் குசன் ஆகிய இருவரும் போரிட வந்திருப்பது தமது தந்தை இராமருடைய படைகள் என்று தெரியாமல் போரில் வென்று விடுகின்றனர். காரணம் லவன் குசன் இருவரும் வித்தைகள் கற்றுக் கொண்டது வால்மீகி முனிவரிடம். இது தற்போது தலைமுறை வித்தியாசம் என்றழைக்கப் படுகின்றது
இந்தக் காலத்தில் நாம் படித்த படிப்பினை விட நமது பிள்ளைகள் தொழில் நுட்பத்துடன் உள்ள படிப்பினை படித்து பெற்றோர் சம்பாதித்தததை விட அதிகமாக அதிக சம்பளம் பெறுவதும் இதன் அடிப்படையில் தான்.
பெற்றோர் கற்ற கல்விக்கும் பிள்ளைகள் படிக்கும் கல்விக்கும் வித்தியாசம் உண்டு என்னும் கருத்து அதாவது இராமன் வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்திரர் ஆகியோர்களிடம் கற்றதைக் காட்டிலும் லவன் மற்றும் குசன் ஆகிய இருவரும் அடுத்த தலைமுறையில் வால்மீகியிடம் கற்றுத் தேர்ந்தது தற்போது உள்ள நவீன கல்வி முறை வித்தியாசம் அந்த காலத்திலேயே இருந்துள்ளதால் தான் இராமனது வழிகாட்டுதலின் படி போர் புரிய வந்த படைகளை இராமனது மைந்தர்களே தோற்கடிக்க முடிந்தது.
இதனைக் கேள்விப் பட்ட இராமன் நமது படைகளைத் தோற்கடித்தவர்களை நேரில் காண வேண்டும் அவர்களைப் போரில் வெல்ல வேண்டும் என்று வரும் சமயம் சீதையை அடையாளம் கண்டு கொண்ட சமயம் அந்த இருவரும் ராமன் சீதைக்கு பிறந்த இரண்டு மைந்தர்களான லவன் மற்றும் குசன் என தெரிய வருகின்றது.
சீதை தமது வாழ்நாள் முடிவுக்கு வரவிருப்புது அறிந்து கொண்டு பூமா தேவியிடம் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட பூமியில் பிளவு ஏற்பட்டு அந்த பிளவில் இறங்கும் சமயம் சீதையை பூமா தேவி ஏற்றுக் கொள்கின்றாள். தற்போது பூகம்பம் அல்லது நில நடுக்கம் ஆகியவைகள் ஏற்படுவது போன்ற காலங்களில் பூமியில் ஏற்படும் விரிசல்கள் இராமாயண காலத்திலேயே இருந்துள்ளது என்பது தெளிவாகின்றது.
இராமர் மனைவியை பூமா தேவி ஏற்றுக் கொண்ட படியால் இராமன் தன்னுடைய புதல்வர்களான லவன் மற்றும் குசன் ஆகிய இருவரையும் மீண்டும் தம்முடன் அழைத்துச் செல்கின்றார்.
இதன் மூலம் திருமணத்திற்குப் பின்னர் மன வேற்றுமை காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்தால் உயிருடன் இருக்கும் சமயம் கணவன் கட்டுப் பாட்டிலோ அல்லது மனைவி கட்டுப்பாட்டிலோ வளர்ந்து வரும் பிள்ளைகளை அவர்களில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் யார் உயிருடன் இருக்கின்றார்களோ அவர்கள் கட்டுப் பாட்டுக்கு மீண்டும் வரும் முறை கடைப் பிடிக்கப் பட்டிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. இராமாயணத்தில் சீதை இறந்தவுடன் லவன் குசன் ஆகிய இருவரையும் இராமன் தன்னுடன் அழைத்துச் செல்கின்றான்.
இராமவதாரத்தில் இராமர் வனவாசம் சென்று விட்டதால் தமது தந்தை தசரதச் சக்ரவர்த்தி இறந்த சமயம் இறுதிச் சடங்குகள் எதுவும் செய்ய முடியாமல் அயோத்தி திரும்பிய சமயம் கண்கலங்கினான். அதே போல இராமருக்கும் லவன் மற்றும் குசன் இருவரும் கொள்ளி போட்டு இறுதிச் சடங்குகள் செய்ய முடியவில்லை.
காரணம் இராமன் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த சமயம் மாயமாகி விடுகின்றார். அதன் பின்னர் இராமன் இராம ராஜ்யத்திற்குத் திரும்ப வரவேயில்லை. தற்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் சமயம் சுழலில் சிக்கி உயிர் நீத்தல் எனப்படுகின்றது.